ஆண்டாள் திருக்கல்யாணம்: திருப்பதியிலிருந்து பட்டு வருகை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2012 11:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் இன்று நடக்கும் பங்குனி விழா திருக்கல்யாணத்தை யொட்டி, திருப்பதியிலிருந்து பட்டு புடவை கொண்டு வரப்பட்டது. விழாவின்போது ஆண்டாளுக்கு அணிவிப்பதற்காக திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து பட்டு சேலை கொண்டுவருவது வழக்கம். அந்த பட்டை உடுத்தி திருக்கல்யாண மேடையில் ஆண்டாள் காட்சியளிப்பார். அதன்படி நேற்று இரவு, திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து தேவஸ்தான அதிகாரி வெங்கட்ராமரெட்டி தலைமையில் தேவஸ்தன நிர்வாகிகள், ஆண்டாளுக்குரிய பச்சைக்கலர் பட்டுச் சேலையை கொண்டுவந்தனர்.இதை தக்கார் ரவிச்சந்திரன் முன்னிலையில் செயல்அலுவலர் குருநாதனிடம் ஒப்படைத்தனர். இப்பட்டு சேலையை உடுத்தி ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.