மதுரை பக்தர்களின் கால்களில் கொப்புளம்: தடுக்க நிழற்பந்தல் அமைக்கப்படுமா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2012 11:04
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில், காலணி இல்லாமல் வெயிலில் நடக்கும் பக்தர்களின் கால்களில் கொப்பளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க, 4 வீதிகளிலும் நிழற்பந்தல் அமைக்க வேண்டும்.காலை 11 மணியளவில் காலணி பாதுகாக்கும் இடத்தில் இருந்து கோயிலுக்குள் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு சித்திரை வீதிகளில் அனல் "பறக்கிறது. தெற்கு கோபுரத்தின் வழியாக செல்லும் வெளியூர் பக்தர்களில் பலர், இதே கோபுரம் வழியாக வெளியே வர தெரிவதில்லை. அம்மன் சன்னதி வழியாக வெளியேறுகின்றனர்.காலணியை எடுக்க, அங்கிருந்து தெற்கு கோபுரத்திற்கு, சித்திரை வீதியில் நடந்து வருவதால், கால்களில் கொப்புளங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. வயதானவர்களின் நிலைமை பரிதாபம். இதை தவிர்க்க, கடந்தாண்டு கீழச்சித்திரை வீதியில் நிழல்பந்தல் அமைக்கப்பட்டது. அதேபோல், இந்தாண்டும் 4 சித்திரை வீதிகளிலும் நிழற்பந்தல் அமைக்க கோயில் நிர்வாகம் முன்வரவேண்டும். நிர்வாக அதிகாரி ஜெயராமன் கூறுகையில், ""சித்திரைத் திருவிழாவின்போது நிழற்பந்தல் அமைக்கப்படும். அதற்குள் விரைவில் நான்கு வீதிகளிலும் விரிப்புகள் விரிக்கப்படும், என்றார்.