பதிவு செய்த நாள்
21
செப்
2019
12:09
கோவை: போத்தனுார், சுந்தராபுரம் பகுதிகளில் ஐயப்பன் தர்ம பிரசார ரத யாத்திரை, நேற்று முதல் வலம் வரத்துவங்கியது.
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில், ஐயப்பன் கோவில் புனிதத்தை காக்க, மாநிலம் முழுவதும், ஐயப்பன் பிரசார ரத யாத்திரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கோவையில் இந்த யாத்திரை கடந்த 11ம் தேதி, கவுண்டம்பாளையத்தில் உள்ள சாந்தி துர்கா பரமேஸ்வரி கோவிலில் துவங்கியது. கோவையில் பல்வேறு பகுதிகளில் நடந்த இந்த யாத்திரை, போத்தனுார் மற்றும் குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதிகளில் வலம் வந்தது. நேற்று ஈச்சனாரி, கோவைபுதுார், இடையர்பாளையத்தில் வலம் வந்த யாத்திரை, இன்று குனியமுத்துார், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் பகுதிகளில் வலம் வருகிறது.