மைக் கிடைத்தால் போதும்; தெரிந்ததை எல்லாம் சொல்கிறேன் என்று வழவழ என சிலர் பேசுவதுண்டு. ஆன்மிக கூட்டத்தில் பேசுவோர் விழிப்புடன் இருப்பது அவசியம். மக்கள் மத்தியில் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை ஆன்மிக கூட்டம் நடத்தினால் போதும். மக்களுக்கு வெறுப்பு வரும் விதத்தில் பேச்சு இருப்பது கூடாது. தனிப்பட்ட உரையாடல் நடக்கும் போது இடை மறித்து, ஆன்மிகம் பேசக் கூடாது. ஒருவர் விரும்பி வந்து மார்க்க சிந்தனை பற்றி கேட்டால் மறுக்காமல் சொல்ல வேண்டும். அடுக்கு மொழி வசனமாக பேச்சு அமையக் கூடாது. ”மார்க்க போதனையின் போது இறை வணக்கம், இறைவனுக்கு கீழ்ப்படிதலையும், வெறுக்கும் விதமாக போதனை இருப்பது கூடாது” என்கிறார் நாயகம். அறிவுரை வழங்கும்போது அதை கேட்கும் மனநிலையில் மக்கள் இருக்கிறார்களா என்பதை உணர்ந்துபேசுவது நல்லது.