மரத்தடியில் மனிதர்களும், கிளைகளில் பறவைகளும் இளைப்பாறுவர். பறவைகள் மரக்கிளைகளில் கூடு கட்டும். அதனால் மரங்களை வெட்டி இயற்கையை அழிக்காதீர்கள். இல்லாவிட்டால் இறப்புக்குப் பின் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்கு ஆளாவீர்கள். இது பற்றி நாயகம், “ நிழல் தரும் மரக்கிளையை தேவை இல்லாமல் வெட்டுபவன் நரகத்தில் தலைகீழாகத் தொங்க விடப்படுவான்” என எச்சரிக்கிறார்.