பதிவு செய்த நாள்
05
ஏப்
2012
01:04
விக்கிரமசிங்கபுரம்:பாபநாசம் கோயிலில் சித்திரை விசுத் திருவிழா கொடியேற்றம் நடந்தது. பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோயில் சித்திரை விசுத் திருவிழாவை முன்னிட்டு நேற்று கோயிலில் கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு கடந்த 3ம் தேதி இரவு சுமார் 7.30 மணிக்கு அங்குரார்ப்பணம் நடந்தது. கொடியேற்ற நாளான நேற்று காலை 9.30 மணிக்கு ரிஷப லக்கனத்தில் கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி ஆனந்த்குமார்ராவ், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவி மனோன்மணி, டாணா மின்வாரிய பொறியாளர் வெங்கடசுப்பிரமணியன், சிவந்தியப்பர் கோயில் நற்பணி மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன், திருவாடுதுறை ஆதீன பொறுப்பாளர் சங்கரபாபநாசம், 9ம் திருநாள் மண்டகப்படி தலைவர் எஸ்.ஆர்.வைத்தியலிங்கம் உட்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருவிழாவின் 1ம் திருநாளான நேற்று மாலை சுமார் 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடந்தது. இரண்டாம் திருநாளான இன்று (5ம் தேதி) இரவு கைலாச பருவதம் அன்னம் வாகன வீதிஉலா, மூன்றாம் திருநாளான 6ம் தேதி காலை 7.45 மணிக்கு சுவாமி அழைப்பு, 9.30 மணிக்கு பாபநாசம் சேனைத்தலைவர் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதிஉலா நடக்கிறது. நான்காம் திருநாளான 7ம் தேதி மாலை திருநாள் மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், இரவு சுவாமி, அம்பாள் வீதிஉலா நடக்கிறது. ஐந்தாம் திருநாளான 8ம் தேதி மாலையில் திருநாள் மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதிஉலா நடக்கிறது. ஆறாம் திருநாளான 9ம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி அழைப்பு, 10 மணிக்கு 6ம் திருநாள் மண்டபத்தில் உற்சவர் அபிஷேகம், மாலை 5 மணிக்கு மூலவர் அபிஷேகம், இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதிஉலா நடக்கிறது.
ஏழாம் திருநாளான 10ம் தேதி இரவு 8 மணிக்கு நடராஜர் பெரிய சப்பரத்தில் புறப்படுதல், இரவு 9 மணிக்கு சோமஸ்கந்தர் சிம்மாசனத்தில் எழுந்தருளல் நடக்கிறது. எட்டாம் திருநாளான 11ம் தேதி காலை நடராஜர் கேடயத்தில் வெள்ளை சாத்தி புறப்படுதலும், காலை 10 மணிக்கு கங்கானநாதர் சிறிய சப்பரத்தில் புறப்படுதலும், மாலை சுமார் 3 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி அலங்காரத்தில் புறப்படுதலும் நடக்கிறது. இதே நாளில் காலை 9 மணிக்கு மண்டகப்படி பொருளாளர் இல்லத்தில் சுவாமி அழைப்பும், காலை சுமார் 10.30 மணிக்கு 8ம் திருநாள் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் அபிஷேக ஆராதனை, இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, 11 மணிக்கு சுவாமி, அம்மாள் வீதிஉலா நடக்கிறது. ஒன்பதாம் திருநாளான 12ம் தேதி காலை 7.35 மணிக்கு மேல் 8 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளலும், காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்தல், இரவு 7 மணிக்கு 9ம் திருநாள் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் அபிஷேக ஆராதனை, இரவு 10 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதிஉலாவும் நடக்கிறது. பத்தாம் திருநாளான சித்திரை விசுநாள் 13ம் தேதி காலை 4 மணிக்கு சுவாமி, அம்பாள் சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு பூம்பல்லாக்கில் சுவாமி, அம்பாள் வீதிஉலா, மதியம் 1 மணிக்கு சித்திரை விசு தீர்த்தவாரி, கேடயத்தில் புறப்பாடு, இரவு 8 மணிக்கு தெப்பஉற்சவம், 1 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக்கோலத்தில் அகஸ்தியருக்கு பாபநாசத்தில் காட்சி கொடுத்தல் நடக்கிறது. பதினோறாம் திருநாளான 14ம் தேதி காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாள் மரபு மண்டபத்தில் எழுந்தருளல், மதியம் சுமார் 12 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு குடமுழுக்கு அலங்கார வழிபாடு, மதியம் 1 மணிக்கு அன்னம் பாலிப்பு, இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் உலா வருதல் ஆகியன நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஆனந்த்குமார்ராவ் செய்துள்ளார்.