பதிவு செய்த நாள்
25
செப்
2019
10:09
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நித்யதிருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சிறப்பினையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் நித்ய கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. புரட்டாசி மாத நான்கு சனிக்கிழமை, அமாவாசையை தவிர்த்து நித்ய கல்யாணம் நடத்துகின்றனர். விஸ்வக்சேனர் வழிபாடு, புண்ணியாவஜனம், பகவத் பிரார்த்தனை, அங்குரார்பனம், பூணுால் சாற்றுதல், மாலை மாற்றுதல் வழிபாடுகளுக்குப்பின் திருக்கல்யாணம் நாள்தோறும் காலை 9:30 மணிக்கு துவங்கி பகல் 12 மணி வரை நடக்கிறது.யாகம் பூர்த்தியடைந்ததும், மங்கள வாத்தியங்கள் முழங்க, வாரணம் ஆயிரம் பாடி, பெருமாள், தாயார் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது.