ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தில் மழை நீர் தேங்கியது. ராமேஸ்வரத்தில் நேற்று அதிகாலை 5:00 முதல் 6:30 மணி வரை மழை 84.20 மி.மீ., மழை பெய்தது. சுவாமி, அம்மன் சன்னதி முதல் பிரகாரத்தில் அரை அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.பின் ஒரு மணி நேரத்தில் மழை நீர் வெளியேற்றப்பட்டது. ரதவீதியில் புதிய வாறுகால் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும், கோயிலுக்குள் மழைநீர் தேங்காது என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.