புதுச்சேரி: அங்காளம்மன் கோவில் நவராத்திரி விழா, வரும் 29ம் தேதி துவங்குகிறது.புதுச்சேரி, சின்ன சுப்ராயப் பிள்ளை வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா, வரும் 29ம் தேதி துவங்குகிறது. அக்டோபர் 24ம் தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு தினமும் மாலையில் அபிஷேகம் நடத்தப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய உற்சவங்களான ஆயுத பூஜை, அக்டோபர் 7ம் தேதியன்றும், அம்பு உற்சவம் மற்றும் விஜயதசமி வீதியுலா 8ம் தேதியன்றும், அக்டோபர் 23ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.