மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி சார்பில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி தெரு அறுபத்தி மூவர் குருபூஜை மடத்தில் அலங்காரம், லலிதா சகஸ்ரநாமம், லட்சார்ச்சனை, திருவிளக்கு வழிபாடு, கூட்டு வழிபாடு, பஜனை உள்ளிட்டவை தினமும் நடக்கிறது. அக்.,8 காலை 7:00 மணிக்கு முளைப்பாரி கரைத்தல், அன்னதானம் நடக்கிறது என பள்ளி தலைவர் விசாலாட்சி தெரிவித்துள்ளார்.