பதிவு செய்த நாள்
28
செப்
2019
02:09
திருத்தணி : திருத்தணியில், சில நாட்களாக பெய்த கனமழையால், முருகன் கோவில் குளம் நிரம்பி காணப்படுகிறது.
திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு செல்லும் மலைப் படிகள் ஏறும் பகுதியில், சரவண பொய்கை குளம் உள்ளது.இக்குளத்தில், பக்தர்கள் புனித நீராடிய பின், மலைப்படிகள் வழியாக நடந்து சென்று, மூலவரை வழிபடுவர். இதுதவிர, ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவின் போது, இக்குளத்தில் மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் நடந்த ஆடிக்கிருத்திகை விழாவின் போது, திருக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், கோவில் நிர்வாகம், தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் சார்பில், டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து விடப்பட்டது.
பின், தெப்பத் திருவிழா நடந்தது. இந்நிலையில், சில நாட்களாக, திருத்தணி நகரத்தில் பெய்து வரும் கனமழையால், சரவணபொய்கை குளம் முழுவதும் தண்ணீர் நிரப்பி, தற்போது உபரிநீர் வெளியேறி செல்கிறது.நான்கு ஆண்டுகளுக்கு பின், தற்போது தான் திருக்குளம் நிரம்பி காணப்படுகிறது.