மஹாளய அமாவாசை: காரைக்காலில் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2019 02:09
காரைக்கால்: காரைக்காலில் தர்மரக்ஷண ஸமிதி சார்பில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு கடற்கரையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் தர்மரக்ஷண ஸமிதி சார்பில் நேற்று அரசலாறும் கடலும் சங்கமிக்கும் இடத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு பித்ருகடன் அளிக்கும் புண்ணிய கிரியை நிதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெறும். மேலும் தர்மரக்ஷண ஸமிதி சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் வரும் பெளர்ணமி மறுநாள் வரும் பிரதமை திதியில் பறக்கும் தங்க விமானத்தில் பூமிக்கு வந்து சேர்வார்கள். மஹாளய பட்ச அமாவாசை வரை 15 தினங்கள் நம்முடையே இருப்பார்கள். ஆயிரம் மடங்கு சூரிய ஒலிக்கும் சமமான ஒளியுடன் அவர்கள் திகழ்வதால் நம் கண்ணுக்கு புலப்பட மாட்டார்கள்.
நம்முடன் இருக்கும் 15 நாட்களில் நம் வாழ்க்கை முறையை நன்கு கவனித்து 15வது நாள் மஹாளய அமாவாசையும் முழு ஆசிகளை நமக்கு வழங்கி விட்டுச் செல்வார்கள். இப்புண்ணிய பூமியில் மட்டுமே இன்றும் அவதரித்து வருகின்றனர். வாழ்ந்து எண்ணற்ற நிலையான பொக்கிஷங்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளார். அதில் ஒன்று தான் மஹாளய பட்சமாகும். இதனுடைய ஏற்றத்தை ஞானத்தால் உணர்ந்து இத்தகைய சமயத்தில் நாம் எவ்விதம் வாழவேண்டும் அதன் மூலம் பித்ருக்களின் ஆசிகளை பெற்று கொடிய பாபத்தை போக்கி அளவற்ற புண்ணியத்தை பெறவேண்டும் என்று உபதேசம் செய்து விட்டு சென்றுள்ளனர். மஹாளய அமாவாசையை முன்னிட்டு காரைக்கால் அரசலாறு கடலும் சங்கமிக்கும் கடல் பரப்பில் தங்கள் முன்னோர்களை வேண்டி புண்ணிய கிரி திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னோர்களுக்கு வாழை இலை. பச்சை அரிசி, காய்கறி, தேங்காய் பழம் வைத்து புண்ணிய தானம் செய்து திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின் முன்னோர்களை வேண்டிய பின் அனைத்தும் கடலில் நீராடிவிட்டு பின் அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு சென்று சிவனை தரிசனம் செய்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அதிகாலை முதல் மதிய வேளை வரை திதி கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.