பதிவு செய்த நாள்
28
செப்
2019
03:09
திருப்பூர்:திருப்பூர் குமார் நகரில் உள்ள, ஸ்ரீசாரதாம்பாள் கோவில், சிருங்கேரி சங்கரமடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா, விமரிசையாக கொண்டாடப் படுகிறது.
அதன்படி, 32ம் ஆண்டு நவராத்திரி விழா, இன்று 28ல், துவங்குகிறது. இன்று காலை, 8:00 மணிக்கு, ஸ்ரீசாரதாம்பாளுக்கு மகா அபிஷேகமும், பகல் 12:00 மணிக்கு மகா மங்கள ஆரத்தியும் நடைபெறும். நாளை 29 முதல், அக்., 7ம் தேதி வரை, லட்சார்ச்சனை, வேத பாராயணம், தேவி மகாத்மிய பாராயணம், காலை, 11:30 மணி மற்றும் இரவு, 8:30 மணிக்கு மகா மங்கள ஆரத்தியும் நடைபெறும்.
வரும், அக்., 8ம் தேதி காலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரை, வித்யாரம்ப நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணிக்கு சாகம்பரி அலங்கார பூஜையும், 8:30 மணிக்கு, மகா மங்கள ஆரத்தியும் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.