பூவரசங்குப்பம் கோவிலில் நரசிம்ம சுதர்சன ஹோமம்
பதிவு செய்த நாள்
30
செப் 2019 01:09
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்ம சுதர்சன தன்வந்திரி ஹோமம் நேற்று துவங்கியது.விழாவையொட்டி, கடந்த 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு சங்கல்பம், புண்யாஹவசனம், அங்குரார்பணம், பாலிகாஸ்தாபனம், பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து,
நேற்று 29ம் தேதி காலை 8:00 முதல் 9:00 மணி வரை மூலவர், உற்சவர் திருமஞ்சனமும், காலை 9:30 மணிக்கு காப்பு கட்டுதல் மற்றும் மூலவர் பெருமாள் தங்க கவச அலங்காரம் நடந்தது.மேலும், வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி பூதேவி அமிர்தவல்லி தாயார் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகள் யாகசாலை புறப்பாடு நடந்தது. பின், நரசிம்ம சுதர்சன தன்வந்திரி மந்திரம், ஸ்ரீசூத்த ஜெபம் மற்றும் ஹோமம், பகல் 12:30 மணிக்கு பூர்ணாஹூதி நடந்தது.யாக சாலையில், ஒரு டன் பழங்கள், 108 மூலிகைகள், 150 கிலோ நெய், பட்டு மற்றும் கொப்பரை தேங்காய் ஆகியவற்றால் ஹோமம் நடந்தது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயக்குமார், தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
|