பதிவு செய்த நாள்
30
செப்
2019
02:09
திருப்புத்துார் : திருப்புத்துார் கோயில்களில் நவராத்திரி விழா துவங்கியது. கொலுக்களை பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.திருத்தளிநாதர் கோயிலில் நேற்று முன்தினம் (செப்., 28ல்) துர்கை,சிவகாமி அம்மனுக்கு காப்புக்கட்டப்பட்டது.
தொடர்ந்து சிவகாமி அம்மன் திருநாள் மண்டபத்திற்குஎழுந்தருளினார். நேற்று 29ல்அம்மன் சிவகாமி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். இரவு 7:45 மணிக்குஅம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. பூமாயிஅம்மன் கோயி லில் மாலை 5:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கியது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்திற்கு பின் தீபாராதனை நடந்தது. கொலுமண்டபத்தில் உற்ஸவர் அம்மன்ராஜராஜேஸ்வரி அலங் காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் கொலுவை பார்வையிட்டனர்.நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலையில் மூலவர் மகாலெட்சுமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. கொலு மண்டபத்தில் அம்பாள் ஆண்டாள் அலங்காரத்தில்பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து உற்ஸவ அம்பாளுக்கு ஆராதனை நடந்தது.தினசரி கோயில் கொலுவில் உற்ஸ வர் அம்பாள் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்தலும், பூமாயிஅம்மன், திருத்தளி நாதர் கோயில்களில்அக்.,8 ல் குதிரை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி உலாவந்து அம்பு எய்தலும் நடைபெறும்.காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நேற்று (செப்., 29ல்) காலை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
முத்துமாரியம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று 30 ல் மூகாம்பிகையம்மன் அலங்காரத்திலும், நாளை 1 முதல் அக்.,7ம் தேதி வரை லெட்சுமி, மீனாட்சி, சக்தி, ஞானப்பால், சிவபூஜை, கருமாரியம்மன், சரஸ்வதி அலங்காரத்திலும் அக்.,8ம் தேதி விஜயதசமி விழாவை முன்னிட்டு அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தினமும் இரவு 7:00 மணியளவில் அலங்காரதீபம் நடைபெறும் என கோயில் உதவி ஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் சுமதி தெரிவித்துள்ளனர்.