பதிவு செய்த நாள்
01
அக்
2019
01:10
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. செப்.,29 அன்று மாலை 6:10 மணிக்கு அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9:35 முதல் 10:25 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. அதை தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. 11நாள் விழாவில் காலை, மாலை ஸ்ரீதேவி, பூதேவியருடன் வெங்கடாஜலபதி பெருமாள் அன்னம், சிம்மம், அனுமன், தங்க கருடன், சேஷ வாகனம், வெள்ளி கேடயத்தில் வீதி உலா வருவர்.
அக்.8ல் தேரோட்டம்: 6ம் நாளான அக்., 5 ம் தேதி காலை 10:35 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறும். ஒன்பதாம் நாள் திரு விழாவை முன்னிட்டு அக்., 8ம் தேதி அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருள்வர். அன்று காலை 10:35 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். அக்.,10 ம் தேதி காலை ஊஞ்சல் உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும். கோயில் கவுரவ கண்காணிப்பாளர் இளங்கோவன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் கணபதிராமன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.