மதுரை : மதுரை கல்களம் ஐயப்பன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பு பூஜை, குங்குமார்ச்சனை குருசாமி தலைமையில் நடந்தது. அக்.,8 வரை தினமும் மாலை 6:00 முதல் 7:00 மணி வரை லலிதாசகஸ்ர நாமம், குங்குமார்ச்சனை நடக்கிறது. அக்.,6 மாலை 5:00 மணிக்கு நடக்கும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்வோர் விளக்கு, பூ மட்டும் கொண்டு வந்தால் போதும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.