வெயில் நம் மீது தாக்காதபடி மரங்கள் நிழல் தருகின்றன. துன்பம் நம்மை தாக்காதபடி உறவினர், நண்பர்கள் நிழலாக துணை நிற்பர். ஆனால் இந்த நிழல் எல்லாம் கடைசி வரைக்கும் வருமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மரங்கள் சாய்ந்து விடலாம். மனித மனங்கள் மாறி விடலாம். ஆனால் மறுமை நாளில் இறைவனின் நிழல் மட்டுமே நம்மைக் காக்கும். அதற்கு தகுதியான ஏழுவகையான மனிதர்கள் யார் தெரியுமா?
* நீதிநெறி தவறாமல் நடக்கும் தலைவர் * இறை வழிபாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர் * இதயப்பூர்வமாக பள்ளிவாசலுக்கு தொண்டு செய்பவர் * மார்க்க விஷயத்தில் ஒற்றுமையுடன் செயல்படுவோர் * இறைவனுக்கு பயந்து பெண்ணாசை மறந்தவர் * இறைபக்தியால் கண்ணீர் சிந்துபவர் * வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாதவர்.