பதிவு செய்த நாள்
01
அக்
2019
04:10
* செப்.28, புரட்டாசி 11: மகாளய அமாவாசை, சிருங்கேரி சந்திர சேகர பாரதி சுவாமிகள் ஆராதனை, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் திருமஞ்சனம், சிருங்கேரி சாரதாம்பாள் மகா அபிஷேகம், விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் நடையழகு சேவை.
* செப்.29, புரட்டாசி 12: நவராத்திரி ஆரம்பம், நெல்லை காந்திமதி லட்சார்ச்சனை, மதுரை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், கழுகுமலை முருகன், மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில்களில் நவராத்திரி உற்ஸவம் ஆரம்பம்
* செப்.30, புரட்டாசி 13: சந்திர தரிசனம், திருப்பதி, மதுரை தல்லாகுளம், கரூர், ஸ்ரீவில்லிபுத்தூர், நாட்டரசன் கோட்டை, குணசீலம், உப்பிலியப்பன் கோயில் தலங்களில் புரட்டாசி உற்ஸவம் ஆரம்பம், சிருங்கேரி சாரதாம்பாள் மகேஸ்வரி அலங்காரம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் விசேஷ தரிசனம்
* அக்.1, புரட்டாசி 14: திருப்பதி ஏழுமலையான் சின்ன சேஷ வாகனம், இரவு அம்ச வாகனம், மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கிருஷ்ண அவதாரம், சிம்ம வாகனம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சந்திர பிரபையில் பவனி
* அக்.2, புரட்டாசி 15: சதுர்த்தி விரதம், திருமலைநம்பி திருநட்சத்திரம், திருப்பதி ஏழுமலையான் முத்து பந்தல் அருளிய காட்சி, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் ராம அவதாரம், அனுமன் வாகனம், சிருங்கேரி சாரதாம்பாள் வைஷ்ணவி அலங்காரத்தில் கருட வாகனம்
* அக்.3, புரட்டாசி 16: உபாங்க லலித கவுரி விரதம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் கஜேந்திர மோட்சம், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசர் கருட வாகனம், திருப்பதி ஏழுமலையான் சர்வ பூபால வாகனம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி, கரிநாள்
* அக்.4, புரட்டாசி 17: சஷ்டி விரதம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் ராஜாங்க சேவை, உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் பவனி, திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம், இரவு கருடசேவை, சிருங்கேரி சாரதாம்பாள் வீணைவாணி அலங்காரம், திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை மாயாண்டி சுவாமிகள் குருபூஜை