பணம் அல்லது பொருளை தர்ம சிந்தனையுடன் பிறருக்கு கொடுப்பதற்கு ’சதகா’ என்று பெயர். ஒருமுறை சதகா குறித்து நபிகள் நாயகம் விளக்கம் அளித்தார். பணமோ, பொருளோ இல்லாத நிலையில் ஒருவன் என்ன செய்ய வேண்டும் என நபித்தோழர் அபிமூஸா கேட்டபோது, “உழைப்பால் தானும் பயன் அடைந்து மற்றவருக்கு சதகா செய்ய வேண்டும். அதுவும் முடியாவிட்டால் கஷ்டப்படுவோருக்கு ஆதரவாக உடனிருந்து உதவலாம் அல்லது நற்செயலில் ஈடுபட வழிகாட்டவோ, துாண்டவோ செய்யலாம். இறுதியாக குறைந்த பட்சம் தீய செயலில் ஈடுபடாமல் ஒருவன் தன்னைக் காக்க வேண்டும். இதுவும் தர்மம் தான்” என்றார்.