ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கிறான். இது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பொருந்தும். நற்செயலுக்கும், தீயசெயலுக்கும் அதைச் செய்தவனே பொறுப்பு. அதற்குரிய பலனை வேறு யாருக்கும் மாற்ற முடியாது. இதை குர்ஆன், “சுமை சுமக்கும் எந்த மனிதனும் மற்றவனின் சுமையை சுமக்க மாட்டான்” என்றும், “ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்கு பொறுப்பாளியாக இருக்கிறான்” என்றும் குறிப்பிடுகிறது. நல்லதைச் செய்தால் அதன் பயன் பலரைச் சென்றடையும். அதை செய்தவனும் நற்கூலி பெறுவான். எனவே நல்லதைச் செய்வோம்.
பொன்மொழிகள்
* பெருமைக்காக ஆடம்பரச் செலவு செய்பவர்கள் ஏழ்மையில் சிக்கி துன்பப்படுவர். * போட்டிக்காகவும், பெருமைக்காகவும் நடத்தப்படும் விருந்துக்கு செல்லாதீர்கள். * தீயில் இட்ட தங்கம் ஆபரணமாக மாறுவது போல, துன்பத்தால் நற்பண்புகள் மனதில் உருவாகின்றன. * நாவை அடக்கி வையுங்கள்; அது உங்களுக்கு அடிபணிந்து இயங்கட்டும். இதில் தான் வெற்றி இருக்கிறது. * உண்மை எது, பொய் எது என விசாரிக்காமல் கேட்டதை எல்லாம் சொல்வதைக் கைவிடுங்கள்.