பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மூல நட்சத்திர திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2019 02:10
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் வரும்5 ம் தேதி மூல நட்சத்திர திருமஞ்சனம் நடக்கிறது. திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்சவடீ சேத்திரத்தில் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் உள்ளது.
இங்கு ஆஞ்ஜநேயர் சுவாமிக்கு ஒவ்வொரு மாதமும் மூலநட்சத்திரத்தன்றும், ஆங்கில மாதம் முதல் ஞாயிற்று கிழமையன்றும் மாலை 4 மணிக்கு பால் அபிஷேக திருமஞ்சனம் நடக்கிறது.இந்த மாதம் வரும் 5ம் தேதி சனிக்கிழமை அன்று ஆஞ்ஜநேயர் சுவாமியின்ஜென்ம நட்சத்திரமும், புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையும் சேர்ந்து வருவது மிகவும் விசேஷமானது.இந்த மூலம் நட்சத்திரமானது 30 ஆண்டுகளுக்குபிறகு வரும் 5ம் தேதி சனிக்கிழமை அன்று தான் வருகிறது. இந்த விசேஷமான நன்னாளில் மூலம் நட்சத்திர பால் அபிஷேக திருமஞ்சனமும், ஆங்கில மாத முதல் ஞாயிற்றுக்கிழமை திருமஞ்சனமும் சேர்த்து காலை 7.30 மணிக்கு 36 அடி உயர பஞ்சமுகஆஞ்ஜநேய சுவாமிக்கு1,500 லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது.இந்த விசேஷ திருமஞ்சனத்தில் பங்கு பெற விரும்பும்பக்தர்கள்பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பால் அபிசேகம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு காலை 11:00 மணிமுதல்பகல் 2:00 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலர் நரசிம்மன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.