தேவாரம், பண்ணைப்புரம் மலையடிவார கன்னிமார் கோயில் புரட்டாசி திருவிழா நடந்தது. வெள்ளைப்பாறை அருவி நீர் எடுத்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோட்டை கருப்பசாமி, சப்த கன்னிமாருக்கு புத்தாடைகள் அணிவித்து 5 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன.வெளியூர் பக்தர்களின் வசதிக்காக பண்ணைப்புரத்திலிருந்து மலையடிவாரம் வரை வாகன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. விழாவில் பங்கேற்றவர்களுக்கு பண்ணைப்புரம் கோணேவார் தாயாதிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.