அம்பாளை எல்லாக் கோயில்களிலும் தினமுமே முழு வடிவத்தில் பார்க்க முடியும். ஆனால், தர்மபுரி தகடூர் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயிலில் உள்ள காமாட்சி அம்மன் சந்நிதியில் ஒரு வித்தியாசம்..ஒரே ஒருநாள் தவிர, ஆண்டு முழுவதும் இந்த அம்மனின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க முடியும். முழுவடிவத்தையும் ஆடி மூன்றாவது செவ்வாய் மாலையில் மட்டுமே தரிசிக்கலாம். இந்த அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதியை விட <உயரமாக உள்ளது. சுவாமியை விட இங்கு அம்பாளுக்கே முக்கியத்துவம். இங்குள்ள சூலினி ராஜ துர்க்காம்பிகை சூலம், சங்கு ஏந்தி கொற்றவையாக மகிஷனை வதம் செய்யும் தோற்றத்தில் காட்சி தருகிறாள். எருமைத் தலையும் மனித உடலும் கொண்ட மகிஷனின் கொம்பைப் பிடித்துக்கொண்டும், இடதுபாதத்தால் கழுத்தின் மீது மிதித்தும் சம்ஹாரம் செய்யும் கோலத்தில் உள்ளாள்.