பதிவு செய்த நாள்
11
அக்
2019
01:10
திருப்பூர்: ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம், திருப்பூர், பூலுவப்பட்டி - பூண்டி ரிங் ரோடு, செட்டிபாளையத்தில் உள்ள ஏ கிரான்ட் மஹாலில், வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. சின்ன தொட்டிபாளையம் ஸ்ரீ கல்யாணரங்கநாயகி சமேத கல்யான ரங்க நாத சுவாமி, ராமானுஜர் கோவில் ஸ்தானிகர், ராமானுஜதாசன் சுவாமி தலைமை வகிக்கிறார்.அன்று, காலை, 7:00 முதல் மதியம், 12:30 மணி வரை, ஸ்ரீபத்மாவதி தேவிக்கு, ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற உள்ளது. அண்ணாமலையார் சார்பில், திருவண்ணாமலை அருணாச்சல ஈஸ்வரர் கோவில் குமர குருக்கள், சீர் கொண்டுவருகிறார். வெள்ளலுார் நாராயண ஜீயர் சுவாமிகள் மங்களா சாசனம் செய்துவைக்கிறார்.கே.ஜி.எஸ்., பள்ளி உரிமையாளர்கள் மற்றும் ஏ கிரான்ட் மஹால் உரிமையாளர்கள், திருக்கல்யாண உற்சவ ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருக்கல்யாண உற்சவத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.