காடுபட்டி, சோழவந்தான் அருகே தாமோதரன்பட்டியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தன. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் செய்யப்பட்டது. சக்தி கரகம் எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மாவிளக்கு, பால்குடம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிளக்கு பூஜையை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.