பதிவு செய்த நாள்
12
அக்
2019
01:10
சென்னை: பவுர்ணமி விழாவையொட்டி, விழுப்புரம் மற்றும் வேலுார் கன்டோன்மென்ட் நிலையங்களில் இருந்து, திருவண்ணாமலைக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வேலுார் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து, இன்று இரவு, 9:45க்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், இரவு, 11:25 மணிக்கு, திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில் இருந்து, நாளை அதிகாலை, 4:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், அதிகாலை, 5:55க்கு, வேலுார் கன்டோன்மென்ட் சென்றடையும். விழுப்புரத்தில் இருந்து, இன்று இரவு, 9:45க்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், இரவு, 11:30 மணிக்கு, திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில் இருந்து, நாளை அதிகாலை, 3:15க்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், அதிகாலை, 5:00 மணிக்கு, விழுப்புரம் சென்றடையும்.