சிங்கம்புணரி: சிங்கம்புணரி அரிவையூர் தெற்குவளவு நகரத்தாருக்கு பாத்தியமான ராமர் கோயிலில் பட்டாபிஷேக விழா நடந்தது. புரட்டாசி சனிக்கிழமையன்று பஜனை மடத்திலிருந்து ராமர் கோயில் வரை விழா கமிட்டியினர் பஜனை பாடியபடி ஊர்வலமாக வந்து ராமருக்கு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த வழிபாடு 300 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது. இக்கோயிலில் நவக்கிரகங்கள் தம்பதியுடன் இருப்பது சிறப்பு. புரட்டாசி சனியான நேற்று ராமருக்கு பட்டாபிஷேக விழா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.