பதிவு செய்த நாள்
18
அக்
2019
02:10
ஓமலூர்: புரட்டாசியையொட்டி, காடையாம்பட்டி, காருவள்ளி சின்னதிருப்பதி, வெங்கட்ரமணர் கோவிலில், இன்று காலை, 9:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, மூலவருக்கு திருமஞ்சனம், சீர்வரிசை சமர்ப்பித்தல் ஆகியவை நடக்கும். தொடர்ந்து, தெற்கு, வடக்கு புற மண்டபங்களில், அன்னதானம், மதியம், அனுமந்த வாகனத்தில், கருட சேவையில் வீதி உலா, இரவு, 12:00 மணிக்கு, மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படவுள்ளது. நாளை மதியம், 3:30 மணிக்கு தேரோட்டம் நடக்கும்.