பதிவு செய்த நாள்
18
அக்
2019
02:10
வீரபாண்டி: புரட்டாசியையொட்டி, தர்ம ரக்ஷேன சமிதி சார்பில், வீரபாண்டி அருகே, பாலம்பட்டி எல்லைப்பெருமாள் கோவிலில், ராமாயண ஞான வேள்வி தொடர் சொற்பொழிவு, கடந்த, 11ல் தொடங்கியது. வீரபாண்டி புலவர் குழந்தைவேலு, பல்வேறு தலைப்புகளில், தினமும் சொற்பொழிவாற்றினார். நிறைவு நாளான நேற்று, சீர்வரிசை தட்டுகளுடன், மேள, தாளம் முழங்க, திரளான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். சிறப்பு பூஜைக்கு பின், ராமர் திருவுருவ படத்துக்கு, கிரீடம் அணிவித்து பட்டாபிஷேகம் நடந்தது. பின், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.