* வாய்ப்பேச்சால் ஒரு பலனும் இல்லை. உழைப்பிற்கு தகுந்த ஊதியம் உண்டு. * அயலானுக்கு தீமை செய்யத் திட்டமிடாதே. * மனிதன் தனியனாக இருப்பது நல்லதல்ல. * கோபத்தில் இருந்து நீங்கு; வெறுப்பை விட்டு விடு. * ஏழைகளின் விருப்பம் நிறைவேறாமல் போகாது. * ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவரை உயர்வாக மதிப்பிட வேண்டும். * சஞ்சலமனம் உள்ளவன் காற்றடிக்கும் திசையெல்லாம் செல்லும் கடலின் அலை போல் அலைக்கழிக்கப்படுவான். * மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனத்துயரமோ உற்சாகத்தை தகர்க்கும். * அறிவாளிகளோடு நட்பு கொள்பவன் அறிவாளி ஆகிறான்; முட்டாளோடு நட்பு கொள்பவன் அழிந்து போகிறான். – பொன்மொழிகள்