சிவகங்கை : சிவகங்கை கவுரிவிநாயகர் கோவிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, 108 கலசாபிஷேகம், அர்ச்சனை நடந்தது. இக்கோயிலில், கடந்த 9ம் தேதி மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் வருஷாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து விநாயகருக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை 10.30 மணிக்கு, 108 கலசாபிஷேகம் நடந்தது. 108 கலசங்களுக்கு சிறப்பு யாகம் நடத்தினர். விநாயகருக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட பஞ்சமுக அர்ச்சனைகள் நடந்தது. இரவு 7 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் முக்கிய வீதிகளில் சுவாமி புறப்பாடு நடந்தது. பூஜைகளை ஆலய அர்ச்சகர் பசுபதி குருக்கள் தலைமையில் செய்தனர். ஆலய நிர்வாகி ஜெகநாதன் ஏற்பாட்டை செய்தார்.