பதிவு செய்த நாள்
24
அக்
2019
04:10
கன்னிவாடி : கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில் குருபூஜை, நவ. 1ல் நடக்கிறது. அக். 31ல் தீர்த்தாபிஷேக விழா நடக்க உள்ளது.
கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில் பிரசித்திபெற்ற மவுனகுரு சுவாமி கோயில் உள்ளது. சுவாமியின் மகாசமாதி தினமான, ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. வெளிமாவட்ட, வடமாநில சாதுக்கள் குவிவது வழக்கம். இந்தாண்டு திருவிழா, அக். 31ல் துவங்குகிறது. இதற்காக, கசவனம்பட்டி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த பக்தர்கள், மாலையணிந்து விரதம் இருந்து வருகின்றனர். சிவனுாரணி, திருமலைக்கேணி, திருமூர்த்தி, சுருளி, சதுரகிரி, சோமலிங்கபுரம், காசி, ராமேஸ்வரம், பம்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து, புனித நீர் எடுத்து வரப்படுகிறது.
தீர்த்த, பால் கலச கிராம விளையாடலுடன், மூலவருக்கு தீர்த்தாபிஷேகம் நடக்கும். நவ. 1ல், அதிகாலை 5:௦௦ மணிக்கு உலக நன்மைக்காக மகா யாகம் துவங்குகிறது. யாக தீர்த்தாபிஷேகம், ஆயிரத்து 8 படி பாலாபிஷேகத்துடன் குரு பூஜை நடக்க உள்ளது. விழாவை முன்னிட்டு, தொடர் அன்னதானம், சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம், தேவார, திருவாசக பாராயணம், ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. மவுனகுரு சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் ஏற்பாடுகள் நடக்கின்றன.