அலங்காநல்லுார் : அழகர்மலை சோலைமலை முருகன் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டது. இதில் தங்கம் 14 கிராம், வெள்ளி 269 கிராம், ரூ.8.36 லட்சம், வெளி நாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன. நிர்வாக அதிகாரி அனிதா, உதவி அதிகாரி ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.