பதிவு செய்த நாள்
25
அக்
2019
12:10
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதிக்கு வந்த அய்யப்ப தர்ம பிரசார ரத யாத்திரையை ஏராளமான பொதுமக்கள் வழிபட்டனர். சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சார்பில், கடந்த செப்டம்பர் 11ம் தேதி துவங்கிய அய்யப்ப தர்ம பிரசார ரத யாத்திரை, வரும் ஜனவரி 10ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்கிறது.
பிரசார ரத யாத்திரை நேற்று முன்தினம் மந்தாரக்குப்பம் பகுதிக்கு வந்தது. ஏராளமான பக்தர்கள் வரவேற்பு அளித்து, சிறப்பு அபிேஷகம் செய்து வழிபட்டனர். ரத யாத்திரையின் சிறப்பு குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலர் சத்தியமூர்த்தி, பொதுமக்கள், பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து நெய்வேலி டவுன்ஷிப், கம்மாபுரம், விருத்தாசலம், நல்லுார், மங்களூர், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம் பகுதிகளுக்கு ரத யாத்திரை செல்கிறது.