எட்டெழுத்து பெருமாள் கோயிலில் 22ம் தேதி சித்திரை பெருக்கு துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2012 11:04
திருநெல்வேலி : அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயிலில் சித்திரை 18ம் பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பக்தர்களிடம் படிதர்மம் வாங்கப்படுகிறது. அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயிலில் சித்திரை 18ம் பெருக்கு திருவிழா வரும் 28ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு சிறப்பு துலாபார பூஜை நடக்கிறது. 28ம் தேதி காலை 7 மணிக்கு கோபாலகிருஷ்ணருக்கு பூர்ணாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சித்தர் பீட பூர்ணாபிஷேகமும், நள்ளிரவு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை பசும்படைப்பு நடக்கிறது. 29ம் தேதி எட்டெழுத்து பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பூர்ணாபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு வடமாலை அலங்கார பூஜை மற்றும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடக்கிறது. 30ம் தேதி காலை 9 மணிக்கு எட்டெழுத்து பெருமாள், பெரிய பிராட்டி தாயார் திருக்காட்சி மற்றும் அய்யாவின் சிவிகை உலா மற்றும் கருடசேவை நடக்கிறது. காலை 11 மணிக்கு தருமபதியில் சிறப்பு அன்னதானம் தர்மபூஜை நடக்கிறது. இதைமுன்னிட்டு நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்களிடம் படிதர்மம் வாங்கப்படுகிறது.