பதிவு செய்த நாள்
28
அக்
2019
02:10
புதுச்சேரி : அரியாங்குப்பத்தில் உள்ள செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் கந்தர் சஷ்டி பெருவிழா நாளை மறுநாள் 30ம் தேதி துவங்குகிறது.
கந்தர் சஷ்டி பெருவிழா, கணபதி வழிபாட்டுடன் நாளை 29ம் தேதி காலை 9:00 மணிக்கு துவங்கு கிறது. மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், முருக பக்தர்களுக்கு காப்புக் கட்டி, கந்தர் சஷ்டி விரதத்தை துவக்கி வைக்கிறார். நகரமைப்புக் குழுமத்தின் தலைவர் ஜெய மூர்த்தி எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.தொடர்ந்து, முருகர் சன்னிதியில் தினசரி மாலையில் உற்சவங்கள் நடக்கிறது.
29ம் தேதி, வேல் வீதியுலா, 30ம் தேதி, சூரபத்மன் திக்விஜயம், 31ம் தேதி, முருகப் பெருமான் சிவபூஜை செய்தல், 1ம் தேதி, வேல் வாங்குதல் ஆகிய உற்சவங்களும், 2ம் தேதியன்று, கந்தர் சஷ்டி சூரசம்ஹாரமும் நடக்கிறது.
வரும் 3ம் தேதியன்று, காலை 9:30 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை யில், திருமணக் கோலத்தில் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, அறங் காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் காமராஜ், பொருளாளர் சிவநேசன், உறுப்பினர் வீராசாமி மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.