திருப்புத்துார்: பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அக்.,29 குருபெயர்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இத்தலத்தில் கிழக்கு நோக்கி தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். வியாழன் தோறும் ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்வர். அக்.,29 அன்று அதிகாலை 3:48 மணிக்கு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
அன்றைய தினம் குருபெயர்ச்சியை முன்னிட்டு கோயிலில் சிறப்பு யாகம், பரிகார ஹோமங்கள் நடக்கிறது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில், வெள்ளி அங்கியில் எழுந்தருள்வார். உற்ஸ வர், ராஜகோபுரத்திற்கும் ஒரே நேரத்தில் நட்சத்திர தீபத்தால் சிறப்பு தீபாராதனை நடக்கும். பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகள் செய்துள்ளனர்.