புதுச்சேரி: மணக்குள விநாயகர் யானை லட்சுமி, தீபாவளியை முன்னிட்டு பட்டாடை அணிந்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கியது.
புதுச்சேரி பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில், லட்சுமி யானை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், லட்சுமியிடம் ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம். தீபாவளி பண்டிகையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள மூலவர், உற்சவர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் புத்தாடை அணிவிக்கப்படும். அதன்படி, கோவில் யானை லட்சுமிக்கு நேற்றுபட்டாடை வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. முன்னதாக, காலையில் நடந்த விநாயகர் பூஜையில் பங்கேற்ற லட்சுமிக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டு, வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, லட்சுமி யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. ஏராளமான பக்தர்கள் லட்சுமி யானையிடம் ஆசி பெற்று, செல்பி எடுத்து கொண்டனர்.