திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனி தாயார் கோயிலில் தீபாவளி பண்டிகையில் வரும் கேதார கவுரி விரதசிறப்பு பூஜைகள் நடந்தது. உற்ஸவ மூர்த்தி களுக்கு விஷேச திரு மஞ்சனம், சாற்றுமுறை, கோஷ்டி பராயணம், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. புத்தாடை அணிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்தனர். உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.