தேவகோட்டை : -தேவகோட்டை கந்த சஷ்டிவிழா கழக ஆண்டு விழா நடந்தது. தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் அருணாசலம் வரவேற்றார். செயலர் வெங்கிடா சலம் அறிக்கை வாசித்தார். ராமநாதபுரம் குமரன் சேதபதி துவக்கி வைத்தார். பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசி வழங்கினார். இன்சூரன்ஸ் அதிகாரி வெங்கடாசலம் பரிசு வழங்கினார்.
’ஞானபுத்திரன்’ என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: பரதன் எந்த நேரத் திலும் பிறர் மேல் பழி போட்டதில்லை. ராமர் திருவடியை வைத்து ஆட்சி செய்தான். 14 ஆண்டு க்கு பின்பும் கொள்கையில் உறுதியாக இருந்தான். பகுத்தறிவு பேசுகிறவர்கள் வீடுகளில் சாமி கும்பிடுகின்றனர். இது பற்றி கேட்டால் தனிமனித சுதந்திரம் என்கின்றனர். நாம் கடவுள் உண்டு என்கிறோம். சிலர் இல்லை என்கிறார்கள், என்றார்.