மானாமதுரை : மானாமதுரையில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவங்கி யதை அடுத்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினர்.மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னதி, அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள முருகன் சன்னதி, வழிவிடு முருகன் கோயில்,இடைக்காட்டூர் முருகன் கோயில், கால்பிரவு முருகன் கோவில் உள்ளிட்ட கோயில்களில் கந்த சஷ்டி விழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசித்தனர். பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவில் சுவாமி புறப்பாடும் நடந்தது.