பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையின் பிரசித்திபெற்ற நாடியம்மன் கோவில் திருவிழாவின் மண்டகபடி நிகழ்ச்சிகள் முடிந்து நேற்று மாவிளக்கு பூஜை நடைப்பெற்றது. முதல்நாள் மண்டகபடியாக கண்டியன்தெரு காமதேனு வாகன மண்டகபடியுடன் தொடங்கி, முனிசிப் கோர்ட் மண்டகபடி, வடுகநாதன் செட்டியார், தியாகராஜன் வகையறா மண்டகபடி, வருவாய்துறை அலுவலகர்கள் மண்டகபடி, நாகராஜன் செட்டியார் பட்டரை மண்டகபடிதாரர்கள், வர்த்தக சங்கம் மண்டகபடி, மகாராஜேஸ்ரீ காட்கேராவ் சாகேப் மண்டகபடி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மண்டகபடி, திருக்கோவில் திட்டம், கடைசியாக நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்கள் என தொடர்ந்து 11 நாள் மண்டகபடிதாரர்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதில் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய பூஜையான மாவிளக்கு பூஜை நேற்று கோலாகலமாக நடந்தது. இந்த பூஜையில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். திருவிழாவின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை போலீஸார் செய்திருந்தனர். கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஊர்காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து நாளை முதல் தொடர்ந்து இரண்டு நாட்கள் மிக விமர்சையான தேரோட்ட திருவிழா நடைபெற இருக்கிறது. முத்துபல்லக்கு காட்சியுடன் கோட்டைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடையும்.