பதிவு செய்த நாள்
29
அக்
2019
03:10
திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா, அபி ஷேகம் மற்றும் காப்பு அணியும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.ஐப்பசி மாத அமாவாசைக்கு அடுத்தநாள், கந்தசஷ்டி விரதம் துவங்குகிறது; சஷ்டி அன்று, சூரசம்ஹார விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள முருகன் கோவில்களில், சூரசம்ஹார விழா, நேற்று 28ம் தேதி காப்பு கட்டும் நிகழ்வுகளுடன் துவங்கியது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு, நேற்று காலை அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மாலையில், கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள், காப்புக்கட்டிக்கொண்டனர்.
தொடர்ந்து, தினமும் காலை, 10:30 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற உள்ளது.
வரும், நவ., 2ம் தேதி காலை அபிஷேகமும், மாலையில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது. சூரனை வதம் செய்து திரும்பும் ஜெயந்திநாதர் என்று பாடப்படும் முருகப்பெருமானுக்கு, இரவு, 8:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.
* திருப்பூர் வாலிபாளையம் கல்யாணசுப்ரமணியர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நேற்று 28ல் நடந்தது. தொடர்ந்து, சஷ்டி விரத இருக்கும் பக்தர்கள், காப்புக்கட்டி, விரதத்தை துவக்கினர்.
* திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில், நேற்று 28 ல், காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரபூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, அலங்கார பூஜை யும், சஷ்டி விரதம் துவக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
* மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவிலில், நேற்று காலை, குழந்தை வேலாயு தசுவாமிக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன. தொடர்ந்து, அர்ச்சகர்கள் கையால் காப்பு அணிந்து, பக்தர்கள் சஷ்டி விரதம் துவங்கினர். விரதம் துவக்கிய பக்தர்களுக்கு, அபிஷேக பால், பிரசாதமாக வழங்கப்பட்டது.
* பல்லடத்தை அடுத்த மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கொண்டாடப்பட உள்ளது, அதை முன்னிட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி கந்த சஷ்டி விரதத்தை துவக்கினர்.
* அவிநாசியிலுள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருக நாதசுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில் உட்பட கோவில்களில், கந்த சஷ்டி விழா துவங்கியது. முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.