பதிவு செய்த நாள்
29
அக்
2019
03:10
வடவள்ளி:முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், தைப்பூசம் மற்றும் கந்தசஷ்டி விழா வெகுவிமரி சையாக கொண்டாடப்படும்.இந்தாண்டு, கந்தசஷ்டி விழா, காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் கோலா கலமாக நேற்று 28ல், துவங்கியது. காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது; 6:00 மணிக்கு, பால், நெய், வெண்ணெய், தேன் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
சுவாமி, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.காலை, 9:00 மணிக்கு, விநாயகர் பூஜை செய்யப் பட்டு, மூலவர், விநாயகர், வீரபாகு, சூலத்தேவர், உற்சவப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. விரதமிருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. நேற்று, அரசு விடு முறை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலை வந்திருந்தனர். அடிவாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வரும், நவ., 3 வரை, காலையும், மாலையும் யாகசாலை பூஜை நடக்கிறது. வரும், 2ம் தேதி, பகல், 2:45 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.