பதிவு செய்த நாள்
29
அக்
2019
03:10
சென்னை : பெசன்ட் நகர், ஆறுபடை வீடு முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழாவை முன்னி ட்டு, நான்காம் ஆண்டு, சூரசம்ஹார விழா கொண்டாப்படுகிறது.
சென்னை, பெசன்ட் நகர், கலாஷேத்ரா காலனியில் உள்ள, ஆறுபடை வீடு முருகன் கோவி லில், கந்தசஷ்டியை முன்னிட்டு, நான்காம் ஆண்டு, சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. விசேஷ அபிஷேக அலங்காரத்துடன் நேற்று துவங்கிய விழா, நவ., 3ம் தேதி வரை, சண்முக விலாசம், கந்தசஷ்டி மண்டபத்தில் நடக்கிறது.
இதில், நாளை 30 ம் தேதி காலை, 8:00 மணி முதல், 7:30 மணி வரை, சண்முகார்ச்சனையும்; 31 மற்றும் 1ம் தேதிகளில், லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.இதைத் தொடர்ந்து, 2ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, சூரசம்ஹாரமும், 3ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, தேவசேனை திருக் கல்யாணமும் நடக்கிறது.அபிஷேகம், சண்முகார்ச்சனை, லட்சார்ச்சனை, சூரசம்ஹாரம், திருக்கல்யாண வைபவங்களில் பங்கு பெற விரும்புவோர், 044 - 4505 0203 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.