பதிவு செய்த நாள்
29
அக்
2019
04:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு நவகிரக நாயகர்க்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, 3:49 மணிக்கு நவக்கிரக குரு பகவானுக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு சன்னதி வளாகத்தில் யாகசாலையில் அனுக்ஞை, விக்னஷே்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், நவகிரக ஆவாகனம், அக்னி காரியம், அன்னம், ஆகியம் சமிது, நூத்தி எட்டு மூலிகைகளால் குருபகவான் மூலமந்திரம், சாந்தி பரிகார ஹோமங்கள், பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி மதியம் 12:00 மணிக்கு நவக்கிரக நாயகரான குருபகவானுக்கு கலச அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை, பக்தர்கள் மற்றும் கோவில் குருக்கள் செய்திருந்தனர்.