திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முகார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2019 12:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு தினமும் இருவேளை சண்முகார்ச்சனை நடக்கிறது.
நவ., 3 வரை காலை 11:00 மணி, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கிறது. ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு 16 வகை திரவிய அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரமாகி, சண்முகரின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சார்யார்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆறுமுகங்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனைகள் நடக்கிறது. பல வகை பிரசாதம் சுவாமிக்கு படைக்கப்படுகிறது.