சிங்கம்புணரி: பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோயிலில் நேற்று விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகும் விழா நடைபெற்றது. காலை சிறப்பு யாகங்களை பிரான்மலை உமாபதி சிவாச்சாரியார் மற்றும் கோயில் பேஸ்கார் கேசவன் தலைமையில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. ஆலயத்தின் முதல் அடுக்கில் உள்ள ராஜயோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், குரு யாகங்கள், பரிகார ேஹாமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து ராஜ யோக தட்சிணாமூர்த்தி குரு ஆலமர செல்வராக சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 5 கோவில் தேவஸ்தானம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.