பதிவு செய்த நாள்
30
அக்
2019
02:10
மதுரை:“தீர்த்தங்கள், நீர் ஆதாரங்களை சுத்தமாக பாதுகாப்பது முக்கிய கடமையாக கொள்ள வேண்டும்,” என காஞ்சி காமகோடி பீடம் விஜயேந்திர சரஸ்வதி வலியுறுத்தினார்.
மதுரை அருகே தேனுார் சுப்ரஜா வளாகத்திற்கு விஜயேந்திர சரஸ்வதி நேற்று (அக்., 29ல்) வந்தார். காஞ்சி காமகோடி பீடம் மதுரை கிளை ஸ்ரீமடம் சமஸ்தானம் தலைவர் சுப்பிர மணியன், விஸ்வாஸ் புரொமோட்டர்ஸ் சங்கர சீத்தாராமன், ஸ்ரீமடம் நிர்வாகிகள் சுந்தர், ஸ்ரீகுமார், ஓய்வு பேராசிரியர் ஜெகதீசன் மற்றும் பக்தர்கள் பூரண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர்.
விஜயேந்திர சரஸ்வதி பேசியதாவது: தீர்த்தங்களை போற்றும் விதமாக கோதாவரி, கிருஷ் ணா, காவிரியை அடுத்து தாமிரபரணியில் புஷ்கரம் நிறைவு பெறவுள்ளது.
மதுரை நாராயணபுரத்தில் பெரியவர் சாதுர் மாஸ்ய விரதம் இருந்தார். சிதலமடைந்த கோயில்களை புனரமைப்பு செய்வது போல் சுத்தமில்லாமல் இருக்கும் நீர் ஆதாரங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும், என வேதங்கள் சொல்கின்றன.
காஞ்சியில் மங்கள தீர்த்தத்தை மகா பெரியவர் சுத்தம் செய்தார். தற்போது அது புதுப்பொலி வுடன் பராமரிக்கப்படுகிறது, என்றார்.
இன்று (அக்.,30) காலை 9:00 மணிக்கு சந்திரமவுலீஸ்வர பூஜை, பிஷாவந்தனம், பாத பூஜை, தீர்த்த பிரசாதம் நடக்கிறது. நாளை (அக்.,31) விஜயேந்திர சரஸ்வதி புறப்படுகிறார். தொடர் புக்கு 98847 13592.